Saturday 5 May 2018

இதெல்லாம் அலெக்சா செய்யும் ஆனால் கூகுள் ஹோம் செய்யாது.! 

அமேசான் எக்கோ செய்யாத பலவற்றஐ கூகுள் ஹோம் செய்யும் என்ற வகையில், இதற்கு முரணாகவும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. கான்டெக்ஸ்ச்சுவல் கான்வெர்சேஷன்கள் முதல் புகைப்படம் அல்லது வீடியோக்களை தொலைகாட்சிகளில் செலுத்த முடியும். அமேசான் எக்கோ அலெக்சாவுடன் பார்க்கும் போது பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. கூகுளும் தன் பங்கிற்கு பல்வேறு புதிய வசதிகளை தனது ஹோம் ஸ்பீக்கரில் சேர்த்து வருகிறது. இந்த பட்டியில் குறைந்து வந்தாலும் கூகுள் ஹோம் மேலும் செய்யக்கூடிய ஏழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். குறிப்பு: இந்த தொகுப்பில் கூகுள் அசிஸ்டண்ட் பெரும்பாலும் அமேசான் அலெக்சாவுடன் ஒப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இரு சாதனங்களும் வாய்ஸ் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதே ஆகும். மொபைல் போன்களில் இருப்பதை விட கூகுள் ஹோம் சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் முற்றிலும் வேறு விதமாக வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! டிராக் பேக்கேஜ் அலெக்சா பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும் என்பதால் அமேசானில் ஆர்டர் செய்த பொருட்களை அலெக்சா மூலம் டிராக் செய்ய முடியும். அலெக்சாவிடம் "Alexa, where's my stuff?" என கேட்டால் போதும், கேட்ட கேள்விக்கு ஏற்ற பதில்களை மிகவும் கச்சிதமாக அலெக்சா வழங்கும். அதாவது நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது, எந்த தேதியில் உங்களுக்கு கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும். இந்த அம்சம் கூகுள் அசிஸ்டண்ட் மொபைல் போன்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்ட நிலையில் கூகுள் ஹோம் சாதனத்தில் இதுவரை சேர்க்கப்படாமல் உள்ளது. கூகுள் ஹோம் சாதனத்திலும் ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை டிராக் செய்யும் வசதி உள்ளது, ஆனால் பேக்கேஜகளை டிராக் செய்வது குறுத்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. கூகுளிடம் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது என கேட்டால், இந்த தகவல் இப்போதைக்கு என்னிடம் இல்லை என்ற பதிலை வழங்கும். டெலிவரி நோட்டிபிகேஷன்கள் ரிமைன்டர்கள் மற்றும் அழைப்புகளுக்கு கூகுள் ஹோம் தற்சமயம் நோட்டிபிகேஷன்களை சப்போர்ட் செய்கிறது, எனினும் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் குறித்த நோட்டிபிகேஷன்களை கூகுள் ஹோம் வழங்காது. அலெக்சா இது போன்ற தகவல்களையும் நோட்டிபிகேஷன்களாக வழங்கும்.

What's App - Don't Toch Here Problem

plans

best mobile lock app